பக்கங்கள்

பக்கங்கள்

23 அக்., 2016

சுன்னாகத்தில் இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் சுன்னாகம் பொலிஸ்நிலையத்தை சேர்ந்த  நிமல் பண்டார(வயது52)   கையில் வெட்டுக்காயங்களுடன்
 24ஆம் விடுதியிலும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த    எச்.எம்.ஹேர(48) என்பவர் தலையில் வெட்டுக்காயத்துடன் அவசர சிகிச்சைப்பிரிவிலும்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பூட்சிற்றிக்கு முன்பாக மதியம் 2 மணியளவில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சுன்னாகம் நகரப்பகுதியில் இனந்தெரியாதவர்களின் வாள்வெட்டில் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்நநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இன்று மதியம் சுன்னாகம் நகரப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் மீதே இ்ந்த வாள்வெட்டு  தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் இருவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக  சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவருக்கு தலையிலும் மற்றயவருக்கு கையிலும் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது