பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2016

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு மனித உடல்கள் கிடைத்தது எவ்வாறு?

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு மனித உடல்கள் கிடைத்தது எவ்வாறு என சந்தேகம் எழுவதாக அனைத்து இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

நேற்று இரகசிய பொலிஸார் மாலபே வித்தியாலயத்திற்கு சென்று வசீம் தாஜூடின் உள்ளிட்ட 26 பேரினது உடற் பாகங்களை கைப்பற்றியதாக கூறப்படுகின்றது. 

இந்த விடயம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இன்று முறைப்பாடொன்றை வழங்கிய பின்னர், அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் கிஷாந்த தசநாயக்க ஊடகவியலாளர்களிடம் மேற்கண்டவாறு குறிப்பிட்டு ள்ளார். 

இலங்கை சட்டத்தின் படி, ஏற்றுக் கொள்ளத்தக்க வைத்திய பீடங்கள் தவிர்ந்த வேறு எந்த நிறுவனங்களிலும் சடலங்களை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை, அவ்வாறு இருக்க சயிடம் நிறுவனத்திற்கு சடலங்கள் கிடைக்கப் பெற்றது எவ்வாறு என சந்தேகம் ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். 

கடந்த காலங்களில் சில பிச்சைக்காரர்கள் காணாமல் போனதாக வௌியான செய்திகளை சுட்டிக்காட்டிய கிஷாந்த தசநாயக்க, தமது நிறுவனத்துக்கு எவ்வாறு மனித உடல்கள் கிடைத்தன என்பதை சயிடம் நிறுவனத்தின் உரிமையாளர் நெவில் பிரணாந்து வௌிப்படுத்த வேண்டும் எனவும், தெரிவித்துள்ளார்.