பக்கங்கள்

பக்கங்கள்

12 அக்., 2016

மீண்டும் அதிகார மையமாக ஒ.பி.எஸ்..!

மிழகத்தின் தென் மாவட்டங்க
ளில் ஒன்றான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1951-ம் ஆண்டில் ஒச்சாத் தேவர் - பழனியம்மாள் நாச்சியாருக்கு மகனாகப் பிறந்த ஒ. பன்னீர் செல்வத்திற்கு, முதலமைச்சருக்கான அங்கீகாரம் மூன்றாவது முறையாகக் கிடைத்திருக்கிறது.
2016 சட்டசபைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று, மே மாதம் 5-வது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, செப்டம்பர் 22-ம் தேதி, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சரின் உடல்நிலை குறித்த பல்வேறு வதந்திகள் உலவிய போதிலும், ஏராளமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வந்து முதலமைச்சரின் உடல்நிலையை விசாரித்தறிந்து சென்ற வண்ணம் உள்ளனர். ஜெயலலிதா, நீண்டநாள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டும் என்ற மருத்துவமனையின் அறிக்கையைத் தொடர்ந்து, தற்காலிக முதலமைச்சரை நியமிக்க வேண்டும்  அல்லது முதலமைச்சர் வகிக்கும் இலாகாக்களை வேறு மூத்த அமைச்சரிடம் ஒப்படைக்க வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவின் நேற்றைய இலாகா ஒப்படைப்பு அறிவிப்பு அமைந்துள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் மூத்த அமைச்சர்கள்  ஒ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை, கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசிய தமிழக  ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யா சாகர் ராவ், அன்றே, முதலமைச்சரின் இலாகா பொறுப்புகள் ஒப்படைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் 4 நாட்களுக்குப் பின்னர், நேற்று வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் ஜெயலலிதா கவனித்து வந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், பொது நிர்வாகம், காவல் மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட இலாகாக்கள் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக நீடிப்பார் என்றும், சிகிச்சை முடிந்து வரும் வரை, இந்த இலாகாக்களை ஒ.பி.எஸ் கவனிப்பார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்து, தேநீர் கடை உரிமையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய ஒ. பன்னீர் செல்வம், ஏற்கெனவே ஜெயலலிதா 2 முறை முதலமைச்சர் பதவியை இழக்க நேரிட்ட போது, முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.1996 முதல் 2001-ம் ஆண்டு வரை பெரியகுளம் நகராட்சித் தலைவராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஒ.பி.எஸ், டான்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஜெயலலிதா, முதலமைச்சர் பதவி வகிக்கத் தகுதி இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அ.தி.மு.க-வில் எத்தனையோ சீனியர் அமைச்சர்கள்  முதலமைச்சர் கனவு கண்டிருந்தபோது, ஒ.பி.எஸ்-க்கு முதல்முறையாக அப்போது முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. 6 மாத காலம் முதலமைச்சராக பதவி வகித்த அவர், செயல்படாத முதலமைச்சர் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டார். 
டான்சி வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதும் முதலமைச்சர் பதவியை விட்டு விலகி, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில்  மீண்டும் இடம்பெற்றார். கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழக்க நேரிட்டபோது, மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் ஒ. பன்னீர்செல்வம். 2015-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி வரை முதலமைச்சராக பதவி வகித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில், தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதாவை விடுவித்து உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து 2015-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானார்.சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா சிறை சென்றதும் அழுதுகொண்டே பதவி ஏற்ற ஒ. பன்னீர் செல்வம், முதலமைச்சர் பதவியில் இருந்து சிரித்துக் கொண்டே விலகினார்.
2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், ஒ.பி.எஸ்-க்கு எதிராக பல்வேறு சர்ச்சைகிள் கூறப்பட்ட போதிலும், போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சரானார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சருக்கான அங்கீகாரம் கிடைக்கக்கூடும் என்று பரவலாக செய்திகள் வெளியான நிலையில், முதலமைச்சருக்கான அந்தஸ்து மீண்டும் ஒ.பி.எஸ்-க்கே கிடைத்திருப்பது, அ.தி.மு.க-வினர் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் பரபரப்பை