பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2016

இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்! மதபோதகர் கைது


நெல்லை மாவட்டம் தாளையூத்தில் இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து  நகைகளை மோசடிசெய்த மத போதகர் இமானுவேல் ராஜ் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கோசுவா இமானுவேல் ராஜ். கிறித்தவ மத போதகரான இவர் நெல்லை மாவட்டம் தாளையூத்து பகுதியில் ஊழியம் செய்த போது அதே பகுதியை சேர்ந்த உஷா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் அவரை திருமணம் செய்வதாக 10 சவரன் நகையை வாங்கி மோசடி செய்து பாலியல் பாலத்காரம் செய்துள்ளார். மேலும் நெல்லை மாவட்டம் பாப்பன்குளம் பகுதியை சார்ந்த சீமாகுமாரியிடம் கணவரை சேர்த்துவைப்பதாக கூறி மத போதனை செய்து. சேர்த்து வைப்பதற்கு நகை மற்றும் பணம் பெற்றுள்ளார்.

இது போன்று கொடியன்குளத்தை சார்ந்த அனுஷ்யாவிடமும் பணம் மற்றும் நகைகளை பறித்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி  உள்ளார். இந்த மூன்று பெண்களும் இது குறித்து அளித்த புகாரின் பேரில் தாளையூத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் மேலும் பல பெண்களை இது போல் மோசடி செய்துள்ளதாகவும் தெரியவருகிறது. இது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்