பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2016

ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி: தேதிகள் அறிவிப்பு!

இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி
அடுத்த வருடம் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கவுள்ளது.
ஃபிஃபா அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி, அடுத்த வருடம் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 28 வரை நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி கொல்கத்தாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா, கொச்சி, நவி மும்பை, கோவா, புது தில்லி, குவாஹட்டி ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறுகிறது.