பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2016

இலங்கையரின் அபிலாசையை பூர்த்தி செய்ய உச்சபட்ச அதிகாரப்பகிர்வு-இலங்கையிடம் வலியுறுத்தும் இந்தியா

எல்லா இலங்கையர்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அதிகபட்ச அதிகாரப்பகிர்வு வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகபட்ச அதிகாரங்களை பகிரும் வகையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துமாறு இலங்கை அரசாங்க த்திடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இதனை இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள இந்தியா, அதனை விதிமுறையாக முன்வைக்கவில்லை என்றும் அந்த வட்டா ரங்கள் கூறியுள்ளன.

தமக்கு எத்தகைய ஆட்சிமுறை சிறந்ததாக இருக்கும் என்று எல்லா இலங்கையர்களும் முடிவு செய்ய வேண்டும் என்றும் இந்தியா கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.