பக்கங்கள்

பக்கங்கள்

9 அக்., 2016

பிரிவினைக்கு இடமில்லை சமஷ்டிக்கு வாய்ப்பு- அமெரிக்காவில் மங்கள

இலங்கைக்குள் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை என்ற போதிலும் சமஷ்டி முறைக்கு கதவு திறக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இலங்கை சமூகத்தினர் மத்தியில் பேசும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சரின் இலங்கை சமூகத்தினருடனான இந்த சந்திப்பில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பௌத்த விகாரைகளில் தேரர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள ரோமா டி சொய்சா என்ற பெண், கேட்கும் அனை த்தையும் கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றதா என அமைச்சரிடம் கேள்வி எழுப்பி யுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பிரிவினைவாதத்திற்கு நாட்டில் இடமில்லை எனக் கூறியு ள்ளார். சமஷ்டி முறையிலான தீர்வுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை வெளிவிவ கார அமைச்சர் முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.