பக்கங்கள்

பக்கங்கள்

21 அக்., 2016

இன்றைய விசாரணைகள் குறித்து நாளைய பத்திரிகைகள் மூலம் அறிவார் ஜனாதிபதி-முன்னாள் இராணுவத் தளபதி தெரிவிப்பு

இன்றைய விசாரணைகள் குறித்து நாளைய பத்திரிகைகள் மூலம் அறிவார் ஜனாதிபதி-முன்னாள் இராணுவத்
தளபதி தெரிவிப்புஇராணுவத்தின் 20 ஆவது இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று பாரிய ஊழல், மோசடிகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பில் விசார ணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்ப ட்டுள்ள நிலையில்
இன்று இடம்பெற்றுள்ள விசாரணைகள் குறித்து ஜனாதிபதி நாளைய பத்திரிகைகளை பார்த்து அறிந்து கொள்வார் என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தரவிற்கு அமைய முன்னாள் இராணுவத் தளபதி லெப்டி னன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று பத்து மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலை யானார்.
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவும் நோக்கில் கிடைத்த நிதியில் 50 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்காகவே தயா ரத்நாயக்க இன்று பாரிய ஊழல், மோசடிகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பில் விசார ணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினரால் விசாரணைக்கு உட்படு த்தப்பட்டுள்ளார்.
சுமார் ஐந்து மணி நேர விசாரணைகளுக்குப் பின்னர் வெளியில் வந்த முன்னாள் இராணுவத் தளபதி ரத்நாயக்க, விசாரணைகளுக்கு முகம்கொடுத்ததை தான் எதிர்க்கவோ, நிராகரிக்வோ விரும்பவில்லை என்று கூறினார்.