பக்கங்கள்

பக்கங்கள்

6 அக்., 2016

அமைச்சர்களிடையே பனிப்போர்

தமக்கு தன்னம்பிக்கை இருந்ததால் அமைச்சரவையில் வந்து குறைகளை தெரிவிக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது அண்மையில் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசங்கத்தில் ஊழல் மிக்க அமைச்சர்கள் இருப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, இவ்வாறு குற்றஞ்சாட்டுபவர்கள் கடந்த காலங்களில் எங்கு இருந்தார்கள், ஊழலை கண்டு வாயை மூடி இருந்தவர்கள் தற்பொழுது வாயை திறந்துள்ளனர்.

அதற்காக தான் நாம் அரசியல் தீர்மானமொன்றை எடுத்தோம், அதன்போது அவர்கள் அரசியல் தீர்மானம் எடுத்தார்களா, நாம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துக்கொண்டு இருக்கவில்லை, நாம் நேரடியாக அமைச்சரவையில் தெரிவித்தோம்.

அமைச்சரொருவர் தொடர்பில் உள்ள பிரச்சனைகளை பேசக்கூடிய சிறந்த இடம் அமைச்சரவை, தனக்கு தன்னம்பிக்கை இருந்தால் அமைச்சரவையில் வந்து கதைக்க வேண்டும் என தெரிவித்தார்