பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2016

கர்ப்பிணி பெண்ணுக்காக மூன்று கிலோ மீட்டர் ரிவர்ஸில் சென்ற பயணிகள் ரயில்..! ரயில் டிரைவர் சாமர்த்தியம்..

காரைகாலில் இருந்து திருச்சி சென்ற பாசஞ்சர் ரயில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே சீராங்குடி
அருகே வந்த போது,
காவிரி விவகாரம் தொடர்பாக ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர்.
போராட்டம் காரணமாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரயிலில் பயணித்த பயணிகள் பெரும்பாலானோர் இறங்கி நடந்து சென்றனர்.
இந்நிலையில் ரயிலில் பயணித்து வந்த, தஞ்சை, வண்டலுரரை சார்ந்த ஜெயகொடி ,26 கர்பிணி பெண்ணுக்கு திடீர் என பிரசவ வலி ஏற்பட்டது.
ரயில் முன்னோக்கி செல்ல தி.மு.க.,வினர் விடவில்லை உடனடியாக சுதாரித்த ரயில்கார்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டு, குளிக்கரை
ரயில்நிலையம் வரை மூன்று கிலோ மீட்டர் துரரம் ரயிலை பின் நோக்கி இயக்கினார்.
குளிக்கரை ரயில் நிலையம் வந்தவுடன் தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்பிணி பெண் ஜெயகொடியை பாதுகாப்பாக ஏற்றிவைத்தனர்.
விவேகமாக செயல்பட்ட ரயில்வே கார்டுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.