பக்கங்கள்

பக்கங்கள்

15 அக்., 2016

திமுகவினரின் முகநூல் - வலைதளங்களை முடக்கும் சைபர் கிரைம் - டிஜிபியிடம் புகார்


திமுக சட்டத்துறை சார்பில் அதன் செயலாளர் கிரிராஜன், டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.  அம்மனுவில்,
 முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது பற்றி எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.  ஆனால், திமுகவினரையும், திமுகவை சார்ந்தவர்களின் முகநூல், வலைதளங்களையும் குறிவைத்து பொய்வழக்கு போட்டு முடக்கப்படுகிறது.  இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.