பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2016

தூரத்தே   இருந்தாலும் மேய்ப்பன் குரல் கேடடால் ...(சிவ-சந்திரபாலன் .பேர்ண்)
......................................................................................................................
போவீரா  போர்க்களத்தில் போய் நின்று எதிரிதனை 
                  பொருதுவீரா பின்னே பெருவெற்றியதனை  
தாவீரா தமிழ்த்தாயி ன்  துயர்  துடைத்து தலைவன் வழி 
                 தமிழீழம் மீட்டுத் தாவெனவே .. நீவிர் 
சாவீரா சாக்களத்தில் சரித்திரமாய் ஆவீரா ஆனாலும் 
           சந்ததிகள் தழைக்கவென சோதரர்கள் பிழைக்கவென 
மாவீரா உன்னை வணங்கி மானசீகமாய் ஏற்று உன் ஆசி 
               மலர்க்கவிதை நான்  தொடுக்கத்தான் .


கல்வெட்டில் பதித்திட்ட  கரிகாலன் கரந்தடிப்படை 
          காவிய த்தை தந்த காவல் தெய்வங்கள் 
வல்வெட்டித்துறை  தந்த வரலாற்று நாயகனை 
          வாழ்த்தி வணங்கி வரைகின்றேன் வருங்கவியை 
சொல்கட்டிபாடவந்தேன் செந்தமிழில் தேட வந்தேன் 
          சேர்த்திடுக என் கவியை அதுவும் சேதி சொல்லும் 
நல்மெட்டி ல் நான் பாட நல்ல வரம் தான்  நாடும் 
          நல்ல சபையோரே  நல்கிடுவேன் நன்றி 

தும்பிவரும் துவக்கும் வரும் தூரத்தே இருந்து 
       தோட் டாக்கள் எகிறிவரும் என்றிருந்த எம்மை 
எம்பி  தாறன் ஏழ் மாவடட சபையும் தாறன் கூடவே 
        எலும்புத் துண்டும் போடும் அரசு அப்போதே 
தம்பியவன் தானெழுந்தான் தரணி யெ ங்கும்தான் மிளிர்ந்தான் 
       தமிழீழம் படைத்திடவே எம்மிடையே எம்மை 
நம்பியிரு நாளை தமிழீழம் வரும் நாள் கிட்டும் 
        நாலு படை  சேர்  நல்ல வழி பார் என்றான் 


கிடுகுவேலி பின்னே கிணற்றடி விடுப்பப்பார்த்தவள் 
         கிரானைட் குண்டெறிய கிளர்த்தெழுந்தான் எதிரி 
பொடுகுப்பேன் பொறுக்கி பெருமுற்றம் தான் பெருக்கியவள் 
           பீரங்கி தானெடுத்து பெரும்குண்டை பாய்ச்சலானாள் 
கடுகு வெந்தசம் கருக்கி கறிவைத்தி றக்கியவள் 
            கரும்புலியாகி கருகி கண்ணெதிரே வெற்றிதந்தாள் 
விடுக இம்மண்ணை என்று வீர நடை போட்டு வந்தாள் 
               வீரமங்கை வழி செல்ல  மேய்ப்பன் அழைக்கின்றான்