பக்கங்கள்

பக்கங்கள்

3 நவ., 2016

வடக்கில் ஆவா குழு உருவாக்கம் -அரசின் குற்றச்சாட்டை மறுக்கிறார் கோத்தா

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே வடக்கில் ‘ஆவா’ குழுவை உருவாக்கினார் என அமைச்சர் ராஜித
சேனாரத்ன கூறியுள்ள குற்றச்சாட்டை, கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
”மலினத்தனமான குற்றச்சாட்டுகளைத் சுமத்துவதை விட்டு, அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது அமைச்சுப் பொறுப்பில் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கடமையை அவர் சரியாக செய்ய வேண்டும். அபத்தமான கதைகளைக் கொண்டு வரக் கூடாது. இதுபோன்ற செயல்களைச் செய்யும் ஆற்றல் எனக்கு இருக்குமேயானால், அதனை நான் பாராட்டாகவே எடுத்துக் கொள்வேன்.
அமைச்சர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான அறிவிப்புக்களினால் தனக்கு அல்ல, ஒட்டுமொத்த இராணுவத்தினருக்கும் ஒரு இழுக்காகவே கருதுவதாகவும் கூறியுள்ளார்.
அரசியல் ரீதியாக தன்மீது மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான தாக்குதல்கள்,  முழு இராணுவத்தினரை தாக்குவதாகவே அமை கிறது என்று தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச, இராணுவத்தினர் ஒருபோதும் இவ்வாறான ஈனச்செயலை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.