பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2016

அதிமுகவுக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு - புதுவை அரசியலில் பரபரப்பு


புதுச்சேரி மாநிலத்தின் நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் நாராயணசாமி போட்டியிடுகிறார்.  இவருக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.  இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முன்னாள் புதுவை முதல்வருமான் ரங்கசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில மக்களின் நன்மைக்காக அதிமுகவுடன் ஆதரவு என அறிவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் ரங்கசாமி.

அதிமுகவிற்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதால் புதுவை அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.