பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2016

கதிர்காமம் யாத்திரிகர் விடுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! - கொலையாளியும் தற்கொலை

கதிர்காமத்திலுள்ள யாத்திரிகர்கள் விடுதியொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருப்பதாக
கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெண்ணின் கழுத்திலும் உடலின் வேறு பாகங்களிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும், இந்தக் கொலையைச் செய்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் நேற்றே கதிர்காம நகருக்கு அண்மித்த பகுதியொன்றில் தூக்கிட்டுத் தற்காலை செய்துகொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
கதிர்காமத்தைச் சேர்ந்த டபிள்யூ.எம்.மங்களிக்கா எனும் 44 வயதான இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலைசெய்யப்பட்டிருப்பதாகவும், தற்கொலை செய்துகொண்டவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான டீ.ஜீ.நிஷாந்த எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையெனவும் கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.