பக்கங்கள்

பக்கங்கள்

27 பிப்., 2017

உலகின் முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது: சீன நிறுவனம் அதிரடி

சீன டெலிகாம் நிறுவனமான ZTE உலகின் முதல் 5G ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது
. உலக சந்தையில் இந்த தொழில்நுட்பம் 2020 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப சந்தையில் முதல் முறையாக 5G திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை ZTE எனும் சீன நிறுவனம் வெளியிட்டுள்ளது. ZTE ஜிகாபிட் மின்னல் வேக மொபைல் நெட்வொர்க் ஆன 5G சேவைகள் உலகெங்கிலும் 2020 ஆம் ஆண்டு வாக்கில் பரவலாக பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் நொடிக்கு 1ஜிபி (1 Gbps) என்ற வேகத்தில் இணைய சேவையை வழங்கும்.தற்சமயம் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி 5G தொழில்நுட்பத்தில் இன்றைய 4G நெட்வொர்க்களை விட பத்து மடங்கு வேகமான சேவையை அனுபவிக்க முடியும். பார்சிலோனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் 360 டிகிரியில் பானாரோமிக் விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ மற்றும் அல்ட்ரா ஹை-ஃபை மியூசிக் மற்றும் வீடியோக்களை மின்னல் டவுன்லோடு செய்ய முடியும்.
புதிய சாதனத்தின் மூலம் மக்களின் இண்டர்நெட் பயன்பாடு முற்றிலும் மாறிவிடும். 5G தொழில்நுட்பங்களுக்கான முன்னுரிமை வழங்குவதே ZTE நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சியை நிர்ணயிக்கும் ஒன்றாக இருக்கும் என ZTE நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் மாறிவரும் நெட்வொர்க்களுக்கு ஏற்ப சாதனங்களை வடிவமைத்து வருகின்றனர். இவை திரைப்படங்களை நேரடியாக டிவியில் இருந்து மொபைல் போன்களுக்கு ஸ்ட்ரீம் செய்ய வழி செய்யும். தென்கொரியாவின் KT கார்ப் நிறுவனம் 5G சோதனைகளை 2018 ஆம் ஆண்டு வாக்கில் நடத்த திட்டமிட்டுள்ளது.
வணிக ரீதியாக இந்த தொழில்நுட்பத்தின் விநியோகம் 2020 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முதல் 5G ஸ்மார்ட்போன் என்ற போதும் தற்போதைய சூழலில் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கைாயளர்கள் பயன்படுத்த முடியாது. இதில் வழங்கப்பட்டுள்ள 5G வசதி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி உள்ளிட்டவை வணிக ரீதியாக வாடிக்கையாளர்களிடம் சென்றடைய இன்னும் சில ஆண்டுகளாகும் என்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.