பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2017

ஒ.பி.எஸ்.ஸை மீண்டும் கட்சியில் சேர்ப்போம்: மா.செ. பேச்சு

தேனி அருகே உள்ள போடி சாலையில் அதிமுகவின் மாவட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிப்பட்டி ஆகி 4 தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெ. பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

பின்னர் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், மறப்போம், மன்னிப்போம் என்ற வகையில் ஒ.பன்னீர்செல்வம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றார். 

 4 தொகுதிகளில் பெரியகுளமும், போடியும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகம் உள்ளதால் தங்க தமிழ்ச்செல்வன் இப்படி பேசுகிறார் என கூட்டத்திற்கு வந்திருந்த கட்சியினர் பேசிக்கொண்டனர்.