பக்கங்கள்

பக்கங்கள்

23 பிப்., 2017

வரலாற்றில் முதல் முறையாக ரூபாவுக்கு எதிராக டொலர் அதிகரிப்பு! பவுண்ட் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை பண பரிமாற்றத்தில் அதிகமாக அதிகரிப்பொன்று இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கான விற்பனை பெறுமதி 153 ரூபாவை கடந்துள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 149.68 ரூபாவாகவும், விற்பனை விலை 153.44 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் தினசரி நாணய மாற்று வீதத்தில் இந்த தரவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு நாணய மாற்று மையத்தில் இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 152.10 ரூபாவாகவும், விற்பனை விலை 154.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அமெரிக்க டொலருக்கு எதிராக நூற்றுக்கு 0.6 வீதத்திலும், பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக நூற்றுக்கு 2.4 வீதத்திலும், யூரோவுக்கு எதிராக நூற்றுக்கு 1.9 வீதத்திலும் ஜப்பான் யென்னிற்கு எதிராக நூற்றுக்கு 3.2 வீதத்திலும் இந்திய ரூபாவுக்கு எதிராக நூற்றுக்கு 1.9 வீதத்திலும் இலங்கை ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது