பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2017

வீட்டை காலி செய்ய ஓபிஎஸ்க்கு நோட்டீஸ்!

 
தமிழக ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து நேற்று மாலை தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவையுடன் நேற்று மாலை ஆளுநர் மாளிகளியில் பதவியேற்றார்.தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்ததை அடுத்து நாளை சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தப்படயிருக்கிறது.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று 24 மணி நேரம் கூட முடியாத நிலையில் தற்போது ஓபிஎஸ்  க்ரீன்வேஸ் சாலையில் தங்கியிருக்கும அரசின் இல்லத்தை  காலி செய்யுமாறு பொதுபணித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. பொதுபணித்துறை முதல்வராக பதவி ஏற்று இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.