பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2017

பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்

Vidhyasagar rao
சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி
பெற்றிருந்தார். இதையடுத்து, சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தாங்கள் தாக்கப்பட்டதாக ஆளுநரிடம் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் அளித்திருந்தார், அதேபோல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் வாக்கெடுப்பு தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக பேரவை செயலாளர் ஜமாலுதீன், விளக்க அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இதற்கான விளக்க அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் ஆளுநர் தெரிவித்துள்ளார்