பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2017

மக்களிடம் கருத்து கேட்ட எம்.எல்.ஏ சசிகலா அணிக்கு ஆதரவு

சட்டசபையில் நடைப்பெற்ற நம்ப்பிக்கை வாக்கெடுப்பில் மக்களின் கருத்தைக் கேட்ட எம்.எல்.ஏ சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது
சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சட்டசபையில் நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாகை எம்.எல்.ஏவும் , மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான தமிமுன் அன்சாரி மக்களிடம் கருத்துக் கேட்க தனது அலுவலகத்தில் கருத்து கேட்பு பெட்டி ஒன்றை வைத்தார்.
ஆனால் நேற்று நடைப்பெற்ற நம்பிக்கைவாக்கெடுப்பில் அவர் சசிகலா அணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்கள் விருப்பப்படியே வாக்களிப்பேன் எனக்கூறியவர் நேற்று நடந்த ஓட்டெடுப்பில், சசிகலா அணிக்கு ஆதரவாக ஓட்டளித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.