பக்கங்கள்

பக்கங்கள்

23 பிப்., 2017

ரொறொன்ரோவில் பலத்த மூடுபனி! சாரதிகளுக்கு எச்சரிக்கை

ரொறொன்ரோ பெரும்பாகத்தை இன்று பலத்த மூடுபனி சூழ்ந்திருப்பதால் அபாயகரமான டிரைவிங் நிலை காணப்படும் என கனடா
சுற்றுசூழல் எச்சரித்துள்ளது.
ரொறொன்ரோ நகரம் மற்றும் ஹால்ரன் பிரதேசங்கள், யோர்க், பீல், டர்ஹாம் பகுதிகளிற்கு மூடுபனி எச்சரிக்கையை கனடா சுற்றுசூழல் விடுத்துள்ளது.
சில பகுதிகளில் அடர்ந்த மூடுபனி தொடர்ந்துள்ளது. இதன் காரணமாக தெளிவற்ற பார்வை நிலை காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் வெப்பநிலை 13 C ஆக காணப்படும். இந்த வாரம் முழுவதிலும் மிதமான வெப்பநிலை காணப்படும். வியாழக்கிழமை சூரிய ஒளி மற்றும் முகில் கலந்து அதிஉயர் வெப்பநிலை 16 C ஆக காணப்படும்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமை காலநிலை எவ்வாறென்பது உறுதிப்படுத்தப்படவில்லை ஆனாலும் வெப்பநிலை பருவகாலத்தை விட அதிகமாக காணப்படும் என கூறப்படுகின்றது. வெள்ளி சனி மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.