பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2017

சற்றுமுன் அனுராதபுரத்தில் பயங்கர விபத்து! 38 பேர் மருத்துவமனையில்

அனுராதபுரம் – பாதெனிய வீதியின் கல்கமுவ , மஹகல்கடவில் பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 38 பேர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கிரபாவ தொடக்கம் கல்கமுவ வரை ஆடை தொழிற்சாலையொன்றிற்கு ஊழியர்கள் ஏற்றி சென்ற பேரூந்தொன்றும் மற்றும் அனுராதபுரத்தில் இருந்து குருணாகலை நோக்கி பயணித்து பேரூந்தொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆரம்ப சிகிச்சைக்காக கல்கமுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 38 பேரில், பலத்த காயங்களுக்கு உள்ளான 8 பேர் குருணாகலை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்