இலங்கை தூதுக்குழுவினர் அமர்ந்துள்ள இடத்தில் அமர்ந்து அவர்களின் உரைகளை ஒளிப்பதிவு செய்யும் பணியே இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. டேவிட் வெஹேலி புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்பட்டவர். அத்துடன் 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் இவர் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றையும் தயாரித்திருந்தார். மேலும் டேவிட் வெஹேலி ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகாவுடன் இணைந்து இலங்கையின் மனித உரிமை தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
|