பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2017

மன்னார் மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித ஸ்தலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வடமாகாண
சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்டச் செயலக மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், வடக்கில் உள்ள பல்வேறு மாவீரர் துயிலும் இல்லங்களை வடமாகாண சபையூடாகவும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களினூடாகவும் புனித ஸ்தலங்களாக மாற்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களையும் புனிதஸ்தலங்களாக மாற்ற அபிவிருத்தி குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுபூர்வமான இடங்களாக விளங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள், இவ்வாறு புனித ஸ்தலங்களாக மாற்றப்படும் பட்சத்தில் மக்கள் அங்கு சுதந்திரமாக சென்று அஞ்சலி செலுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்