பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2017

பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளரின் வீடு புலனாய்வாளர்களால் சோதனை

பிரான்ஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஃபிரான்ஸ்கொய்ஸ் ஃபிலோனின் வீடு புலனாய்வாளர்களால் சோதனையிடப்பட்டதாக
பிரான்ஸ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மனைவிக்கு போலியான வேலை வழங்கி ஊதியத்தினை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் ஒருபகுதியாக நேற்று (வியாழக்கிழமை) இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இத்தகைய குற்றச்சாட்டுக்களை ஃபிலோன் தொடர்ந்தும் மறுத்து வருகின்றார்.
அவரது நாடாளுமன்ற அலுவலகம் கடந்த மாதம் சோதனையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.