குற்றம் சுமத்தப்பட்டவர்களின் சுயவிபரங்கள் பற்றிய முழுமையான விசாரணைகள் நேற்று ஆரம்பமாகின.இதன் போது அவர்கள், தமிழர்களின் போராட்ட கால வரலாற்றை குறிப்பிட்டு தாயகத்தில் தாம் வாழ்ந்த காலம் தொடக்கம் சுவிட்சர்லாந்தில் அவர்களின் வாழ்க்கை வரை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் தமது சுயவிபரங்களை தெரிவித்தனர்.இந்த வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இன்று மதியம் வரை நடைபெறும். தொடர்ந்து இன்று பிற்பகல் இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் சார்ந்த விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.
|