பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜன., 2018

மகஸ்கரில்அவா’ புயலில் சிக்கி 29 பேர் உயிரிழப்பு

மடகஸ்கரில் ‘அவா’ புயலுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட அவா புயலினால் மடகாஸ்கரின் கிழக்கு பகுதி பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மணிக்கு 140 முதல் 190 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியமையினால் மழையும் அதனால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

புயல் மழை காரணமாக அண்டனானரீவோ பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்புயலினால் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர். பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.