பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2018

கட்சியில் இருந்து நீக்கப்படும் போது அதிமுக சார்பில் விவாத நிகழ்ச்சியில் இருந்த பேரா.தீரன்!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பேராசிரியர் தீரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பேராசியர் தீரன் என்ற ராஜேந்திரன். இவர் அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்ப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.


பேராசியர் தீரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது, அவர் பிரபல செய்தி ஊடகம் ஒன்றில் அதிமுக சார்பில் விவாதத்தில் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.