பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2018

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்கு தேர்தல் திணைக்களம் தடை

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில், 'இடைக்கால அறிக்கையின் மாயைகளை களைதல் மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் கேடயமாக சர்வதேச சட்டங்கள்' எனும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழகத்தில் , இரண்டு கல்வியியலாளர்கள் கருத்துரை வழங்கவிருந்த கலந்துரையாடலுக்குத் தேர்தல் திணைக்களம் தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் குறித்த நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் நிகழ்விடம் வீரசிங்கம் மண்டபத்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.

நாளை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெறவிருந்த கூட்டத்தில் பேராசிரியர் முத்துக்குமாரசாமி சொர்ணராஜா மற்றும் சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற்றவிருந்தனர். தமிழ் மக்கள் பேரவை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் தற்போது அது தடைசெய்யப்பட்டுள்ளது.