பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜன., 2018

ஜல்லிக்கட்டில் மூவர் பலி

பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் மூவர் உயிரிழந்தனர்.ஜல்லிக்கட்டு விவகாரம் கடந்த வருடம் மத்திய அரசையே ஆட்டிப் பார்த்தது. இந்த நி
லையில், இந்த வருடம் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசியல்வாதிகள் பலரும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டனர்.
குறிப்பாக, முதல்வர் ஈ.பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜல்லிக்கட்டுப் போட்டியொன்றில் கலந்துகொண்டதுடன், போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு கார்களைப் பரிசளிப்பதாகவும் தெரிவித்தனர்.
அவர்களுக்குப் போட்டியாக, ஆர்கே நகர் நாயகன் தினகரன், மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியொன்றில் வெற்றிபெறுபவருக்கு சிங்கப்பூர் சென்றுவர இலவச விமானச் சீட்டுக்களை வழங்கியிருந்தார்.
எனினும் முறையான ஏற்பாடுகள் இல்லாமல் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில், பார்வையாளர் வரிசையில் நின்றிருந்த இளைஞரை மாடு முட்டியதில் உயிரிழந்தார்.
மற்றொரு போட்டியில் பங்கேற்றிருந்த போட்டியாளர்கள் இருவரை மாடுகள் பந்தாடியதில் உயிரிழந்தனர்.