பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2018

ஜனாதிபதியின் பதவிக்காலம் - இன்று முடிவு செய்கிறது உயர்நீதிமன்றம்!

தமது பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியிருந்தமை தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று ஆராயவுள்ளது. 2021ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் தாம் ஜனாதிபதியாக செயற்பட முடியுமா, இல்லையா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் கருத்து கோரியிருந்தார். இது தொடர்பில் ஆராய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற மைத்திரிபால சிறிசேன 9ஆம் திகதி ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அந்த காலப்பதியில், இலங்கையில் நடைமுறையிலிருந்து அரசியல் யாப்புக்கு அமைய, ஜனாதிபதியின் பதவிகாலம் ஆறு ஆண்டுகளாக இருந்தது.

இதையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தினால், 19ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தாம் 2021ஆம் ஆண்டு வரையில் ஜனாதிபதியாக தடையின்றி பதவி வகிக்க முடியுமா? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதி, உயர் நீதிமன்றத்திடம் கோரி இருந்தார். இது தொடர்பில், ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழு இன்று ஆராயவுள்ளது