பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2018

மாநகர பேருந்தில் பயணித்த விஜயகாந்த்!(படங்கள்)

அரசு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பல்லாவரத்தில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாநகர பேருந்தில் சென்றார்.  

இது குறித்து விஜயகாந்த்,  ’’பொதுமக்கள் அன்றாடம் பயணிக்கும் பேருந்தில் இன்று பயணித்தேன். அப்பொழுது அந்த பேருந்தில் மக்கள் பயன்படுத்தும் இருக்கைகள் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதையும், செல்லக்கூடிய அனைத்து அரசு பேருந்தும் கட்டண உயர்வினால் காலியாகவே சென்றுகொண்டிருகிறது என்பதையும், பேருந்து கட்டண உயர்வை பற்றி பயணிகளிடம் கேட்டபொழுது இந்த கட்டண உயர்வு பெரும் சுமையாகவே உள்ளது என்பதையும் தெரிவித்தார்கள். அதனால் மக்கள் இதை பெரும் சுமையாகவே கருதுகிறார்கள். எனவே உடனடியாக அரசு பேருந்து கட்டண உயர்வை முழுவதுமாக ரத்து செய்து, மாற்றுத்திட்டங்கள் என்ன இருக்கிறது என்பதை யோசித்து அதன்படி செயல்படுத்த வேண்டுமே தவிர, மக்கள் மீது சுமையை தினிக்கக்கூடாது’’என்று தெரிவித்துள்ளார்.


படங்கள்: எஸ்.பி.சுந்தர்