பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜன., 2018

தயா மாஸ்டரை தாக்கியவர் மனநோயாளி?

விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகச் செயலாளர் தயா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தியவர் ஒரு மன நோயாளி என்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கலையகத்துக்குள் புகுந்த வயோதிபர் ஒருவர், அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரான தயா மாஸ்டரைத் தாக்கியதுடன் கத்தியால் குத்திக் கொலை செய்ய முற்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகச் செயலாளர் தயா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தியவர் ஒரு மன நோயாளி என்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி போது தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கலையகத்துக்குள் புகுந்த வயோதிபர் ஒருவர், அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரான தயா மாஸ்டரைத் தாக்கியதுடன் கத்தியால் குத்திக் கொலை செய்ய முற்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

பின்னர், அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்ட அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர் ஒரு மன நோயாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகநபரை வைத்தியசாலையில் அனுமதித்து முழுமையான வைத்திய அறிக்கை ஒன்றை பெற்று நீதிமன்றத்தில் சமர்பிக்க யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.