அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள் பங்கேற்கின்றன. 1,241 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்க நாணயம், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், பீரோ, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.