பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2018

கோலாகலமாக நடந்த இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம்

இலங்கையின் 70 வது சுதந்திர தினம் ´ஒரே நாடு´ என்ற தொனிப்பொருளின் கீழ்
கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பிரிட்டிஷ் அரச குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இளவரசர் எட்வெட் மற்றும் அவரது பாரியார் விசேட அதிதிகளாக வைபவத்தில் கலந்து கொண்டார்கள்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு விசேட பிரதிநிகள் குழு சுதந்திர வைபவத்தில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.