பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2018

யாருக்கு ஆதரவு? - ஜனாதிபதியே முடிவெடுப்பாராம்!


உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து கட்சிகளிடையே பலத்த போட்டிகள் நிலவி வருகின்ற நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்
நிலைப்பாடு குறித்தான இறுதி முடிவை ஜனாதிபதியே எடுப்பாரென அக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்
“ உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதுக்கு எதிராக எங்களது கட்சி இருக்காது. ஆனால் தவறான செயற்பாடுகளுக்கு நாம் ஆதரவை வழங்குவோம் என்றும் யாரும் எதிர்பார்க்க முடியாது.உள்ளுராட்சி மன்றங்களில் எங்களது கட்சியின் இறுதி முடிவை கட்சித் தலைவரான ஜனாதிபதியுடன் பேசியே எடுக்க முடியும். இதனடிப்படையில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை. ஆகவே உயர் மட்டத்துடன் பேசி விரைவில் எமது இறுதி முடிவை அறிவிப்போம்” என்றார்.