பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2018

எந்த விசாரணைக்கும் தயார்! - கோத்தா

எந்த விசாரணைக்கும் தாம் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் ஊடாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்“ கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அரசாங்கம் எனக்கு எதிராக சேறு பூசும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.கடந்த காலங்களைப் போன்றே நான் எனக்கு எதிரான விசாரணைகளை எதிர்கொள்வேன்.
எந்த விசாரணைக்கும் தாம் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் ஊடாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்“ கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அரசாங்கம் எனக்கு எதிராக சேறு பூசும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.கடந்த காலங்களைப் போன்றே நான் எனக்கு எதிரான விசாரணைகளை எதிர்கொள்வேன்.

நாட்டுக்கு நேர்மையாக சேவையாற்றிய எனக்கு, சேறு பூசுதல்கள் மூலமோ விசாரணை எச்சரிக்கைகள் மூலமோ என்னை அச்சுறுத்த முடியாது. உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் சேறு பூசல்களுக்கு பதிலளிக்கக்கூடிய சிறந்த வழி, நாடு திரும்பி பொலிஸாருக்கு தேவையான தகவல்களை வழங்குவதேயாகும். ராஜித சேனாரட்ன போன்றவர்கள் இழிவான சேறு பூசல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல்வாதிகளை விடவும் மக்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள், பொய்யினாலும் அடக்குமுறையினாலும் தற்போதைய அரசாங்கம் ஆட்சி நடத்தி வருவதாகவும் இதற்கு மக்கள் சரியான பதில் உரிய நேரத்தில் வழங்குவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்