பக்கங்கள்

பக்கங்கள்

9 பிப்., 2018

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை

இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை அடுத்தே, கொழும்பு நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை அடுத்தே, கொழும்பு நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

லசந்த விக்கிரமதுங்க கொலை நடந்த காலகட்டத்தில், இவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.