பக்கங்கள்

பக்கங்கள்

23 பிப்., 2018

மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டம்பரில்;புதிய முறையில் நடத்தப்படும்?

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.




இந்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ளார்.



கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் பதவிக்காலம் தற்போதும் முடிவடைந்திருக்கின்றது.



மேலும் மத்திய, வடக்கு மற்றும் வடமேல் ஆகிய மாகாண சபைகளின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் முடிவுக்கு வருகின்றன.



இந்த நிலையில் அடுத்த கட்டமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.



மாகாண சபைத் தேர்தலையும் புதிய முறையிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.