பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2018

தமிழர்கள் தமது வாக்குப் பலத்தை நிரூபிக்க வேண்டும்-இரா.சம்பந்தன்


எங்களுடைய மக்களிடம் உள்ள பலம் வாய்ந்த ஆயுதம் வாக்கு இதன் மூலமே தமிழினத்திற்கு எதிரான கடந்த ஆட்சியாளர்களை தோற்கடித்தோம்.

அதைப் போல் நமக்கான ஆட்சியை உள்ளுராட்சி சபைகளில் நிறுவ தமிழ் மக்கள் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில் 31ம் திகதி திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட பணிமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் முன்னால் கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் கனடா நாட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் குகதாசன் உட்பட கட்சியின் ஏனைய பல பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய இரா.சம்பந்தன். திருகோணமலை மாவட்டத்தின் நீண்ட கால தேவையாக இருந்து வந்த கட்சியின் நிரந்தர பணிமனை பலரது முயற்சியின் நிமிர்த்தம் நடந்தேரியுள்ளது.

இதன் மூலம் பல்வேறு தேவைகளுடனும் பிரச்சினைகளுடனும் வரும் எமது மக்களுக்கான சேவைகள் வழங்கப்படவுள்ளது.அதற்கான ஒத்துழைப்பை நான் உட்பட ஏனைய பிரதிநிதிகளும் வழங்குவோம்.

எமது மக்கள் தொடர்ச்சியாக பல தேர்தல்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

அதாவது மாகாணசபை பாராளுமன்றம் போன்ற தேர்தல்கள் இதிலும் எமது மக்கள் தமது வாக்கப் பலத்தை நிரூபிக்க வேண்டும் 2015 ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற மாற்றத்தைப் போல் பல மாற்றங்கள் இடம் பெறவேண்டும்.

இந்த நாட்டில் ஜனநாயகம் ஏற்பட மனித உரிமை நிலைத்திருக்க நீதி மன்றங்கள் சுதந்திரமாக செயற்பட நிறுவனங்கள் மதிக்கப்பட சட்டம் ஒழுங்கு நடைமுறைப்படுத்த நாம் அன்றுபோல் இன்றும் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் இருக்கின்றோம் என்பதை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாடுகளுக்கும் நிரூபிக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.