பக்கங்கள்

பக்கங்கள்

9 பிப்., 2018

மட்டக்களப்பு, மூதூரில் வாக்குச்சீட்டு மிக நீளம்

நாடளாவிய ரீதியில் சனிக்கிழமை நடக்கவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், மட்டக்களப்பு மற்றும் மூதூர் ஆகிய இரு இடங்களிலேயே, மிகவும் நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, மிகச் சிறியதான வாக்குச் சீட்டு, பாணந்துறை நகர சபைக்காக அச்சடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாநகர சபைக்காக 11 அரசியல் கட்சிகள் 5 சுயேச்சைக் குழுக்கள் உள்ளிட்ட 16 போட்டித் தரப்புக்களை உள்ளடக்கிய வாக்குச் சீட்டும், மூதூரில் 14 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேச்சைக் குழுக்களுடன் 16 போட்டித் தரப்பாரை உள்ளடக்கிய வாக்குச் சீட்டும் மிக நீளமானது என்ற அடிப்படையில், அச்சடிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாநகர சபைக்கு 33 உறுப்பினர்களும் மூதூர் பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களும் தெரிவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது