பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2018

மைத்திரி - ரணில் இன்று மீண்டும் சந்திப்பு! - புதிய அரசு குறித்து ஆலோசனை

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன் உட்பட பலர் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

அதேவேளை, அரசாங்கத்தின் எதிர்கால நகர்வுகள் குறித்து இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டம் கட்டமாக ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று நண்பகல் 12 மணிக்கு ஒரு சந்திப்பு இடம்பெற்றது. மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக்கட்சியை தனி அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளனர். இதன் பிரகாரம் இன்றைய தினம் ஜனாதிபதியுடன் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடி தீர்க்கமான முடிவென்றை எடுக்கவுள்ளார். ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேருடன் இன்று நண்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.