பக்கங்கள்

பக்கங்கள்

27 பிப்., 2018

அம்பாறையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல், கடைகள் மீது சிங்களவர்கள் தாக்குதல்! - அதிகாலையில் பதற்ற


அம்பாறை நகரில் இன்று அதிகாலை முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும், கடைகள் சிலவும் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின.
முஸ்லிம் ஒருவரின் உணவகத்துக்கு உணவருந்தச் சென்ற சிங்கள இளைஞர்கள் சிலர் உணவக உரிமையாளருடன் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து உணவகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்
அத்துடன் அவர்கள் அங்குள்ள மற்றுமொரு வர்த்தக நிலையத்திற்கும் தீவைத்து விட்டு, பள்ளிவாசலுக்கும் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பள்ளிவாசலின் மதில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசலிலிருந்த மக்கள் விரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வாகனங்கள் சிலவும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.