பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2018

முடிவை மாற்றியது தமிழ் அரசுக் கட்சி - நான்கு வருடங்களும் சேனாதிராஜாவுக்கே

வவுனியா நகரசபையின் தவிசாளராக நா.சேனாதிராசா நான்கு ஆண்டுகளும் பதவி வகிப்பார் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி நடை பெற்ற தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் கூட்டத்தில் எடுத்த முடிவின் படி நகரசபை தவிசாளர் பதவி முதல் இரண்டு வருடங்களுக்கு நா.சேனாதிராசாவுக்கும் அடுத்த இரண்டு வருடங்கள் த.பராதலிங்கத்துக்கும் ஒதுக்குவது என்று முடிவு அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் நேற்று காலை 9 மணியளவில் ஒன்று கூடிய வவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் மாவட்டக்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சேனாதிராசாவுக்கே 4 வருடங்களும் ஒதுக்கபட வேண்டும் என்று கோரியமையால் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி 4 வருடங்களுக்குமான தவிசாளராக நா.சேனாதிராயா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.