பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2018

மன்னார் நகர சபை தலைவராக ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு

மன்னார் நகர சபை தலைவர் பதவிக்கு ரெலோவைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னாரிலுள்ள விடுதியொன்றில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண விவசாய அமைச்சர் எஸ்.சிவநேசன், வடமாகாணசபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.