பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2018

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் கிடுக்கிப் பிடியில் மகிந்த! - 3 மணி நேரம் விசாரணை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம்
, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று முற்பகல் 11.00 மணியளவில், கொழும்பு 07, விஜேராம வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆறு பேர், விசாரணைகளை முடித்துக் கொண்டு பிற்பகல் 2.00 மணியளவில் அங்கிருந்து சென்றனர்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று முற்பகல் 11.00 மணியளவில், கொழும்பு 07, விஜேராம வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆறு பேர், விசாரணைகளை முடித்துக் கொண்டு பிற்பகல் 2.00 மணியளவில் அங்கிருந்து சென்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடமும், குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008 மே மாதம் 22 ஆம் திகதி, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளான நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.