பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2018

70 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் மன்னாரில் சிக்கிய இளம் தம்பதி! - மாணவர்களே குறி

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை மாத்திரைகளைப் பொலிஸார் நேற்று அதிகாலை கைப்பற்றினர். இவற்றைக் கடத்திய குற்றச்சாட்டில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரிலிருந்து காரில் கொழும்பு செட்டித் தெரு நோக்கிப் பயணிக்க இருந்த இளம் தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜெயசுந்தர தலைமையிலான குழுவினர் இந்தக் கடத்தலை முறியடித்தனர். 24 வயதுடைய கணவனும், 22 வயதுடைய மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் போதை மாத்திரைக் கடத்தலுக்கு இந்தியா மற்றும் டுபாய் நாட்டிலிருந்து கடத்தல்காரர்கள் தொடர்பில் இருந்தனர் என்று முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஒவ்வொன்றும் 200 மில்லி கிராம் நிறையுடைய 70 ஆயிரம் போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன