பக்கங்கள்

பக்கங்கள்

23 ஆக., 2018

என்னை பொருத்தவரை தொண்டர்கள் தான் தலைவர்கள் - மு.க.அழகிரி

என்னை பொருத்தவரை தொண்டர்கள்தான் தலைவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி தெரிவித்துள்ளார்.

இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க அழகிரி செப்டம்பர் 5. ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள அமைதி பேரணி குறித்து கூறியதாவது:-

சென்னையில் நடைபெறும் பேரணி குறித்து எந்த தலைவருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. என்னை பொருத்தவரை தொண்டர்கள் தான் தலைவர்கள். மதுரையில் நாளை தொண்டர்களை சந்திக்கவுள்ளேன். செப். 5-ல் நடத்தப்படும் அமைதிப் பேரணியில் வேறு கட்சியினர் கலந்துகொள்ள மாட்டார்கள்

செப். 5-க்கு பிறகு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். கூட்டம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படாது .