பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2018

எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனே தொடர்வார்: சபாநாயகர் அறிவிப்பு

பாராளுமன்றத்தின் தற்போதைய விதிமுறைகளுக்கும் அரசியலமைப்புக்கும் அமைய எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகள் இன்று (10) ஆரம்பமான போதே சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.அரசியல் அமைப்பு அல்லது பாரம்பரிய நடைமுறைக்கு அமைவாக எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் வேறொரு நபரை நியமிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், பிரித்தானிய பாரம்பரியம் அல்லது உலகில் ஏனைய சம்பிரதாயத்திற்கமைவாக இதனை செய்யமுடியாதென்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

பாராளுமன்ற விவாதத்திற்கு நேர ஒதுக்கீடு செய்யும் பொழுதும் நாடாளுமன்ற தெரிவிக்குழு சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்கட்சிக்கு தற்பொழுது வழங்கப்படும் நேர ஒதுக்கீடு மற்றும் அதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சி சமீபத்தில் சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் ஈடுபடுத்துமாறு தெரிவித்திருந்தது.

இதனால் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவராகவுள்ள இரா.சம்மந்தனின் பதவி பறிபோகும் அபாய நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.